அசிங்கப்பட்ட இடத்தில் கெத்து காட்டிய அறந்தாங்கி நிஷா- ஒற்றை பதிவால் குவியும் வாழ்த்துக்கள்
அசிங்கப்பட்ட இடத்தில் கெத்து காட்டிய அறந்தாங்கி நிஷாவின் பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அறந்தாங்கி நிஷா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் அறந்தாங்கி நிஷா.
ஆண் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அறந்தாங்கி நிஷா பேசியது அவரை உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த ரீச்சை பயன்படுத்தி நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கும் தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார்.
வெளியில் வந்தவுடன் சின்னத்திரையில் நடிகையாக தொகுப்பாளினியாக கலக்கி வரும் நிஷா வெள்ளித்திரையில் படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
கெத்து காட்டிய நிஷா
இவ்வளவு பிஸியாக இருந்தாலும் எப்போதும் அவரது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன்படி, அறந்தாங்கிய நிஷா சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் அவரது வீட்டில் நடக்கும் விடயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அந்த வகையில், அறந்தாங்கி நிஷா சொந்தமாக வீடு கட்டி, அதற்கு அவருடைய கலாச்சார முறைப்படி பெயர் வைத்துள்ளார். முஸ்லிம்களாக இருப்பதால் வீடு கொடுக்க மறுத்த இடத்தில் இவர், சொந்தமாக வீடு கட்டியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இவற்றை பார்த்த ரசிகர்கள் நிஷா குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |