பட வெற்றி விழாவிற்கு மனைவியுடன் வந்த நாக சைதன்யா- மாமனாரும் உடன் இருந்தாரா?
கணவன், மனைவியாக முதல் முறையாக ஷோவில் கலந்து கொண்ட நாக சைதன்யா- சோபிதா தம்பதிகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாக சைதன்யா- சோபிதா திருமணம்
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்த இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக மீண்டும் நாக சைதன்யா அறிவித்திருந்தார்.
இவர்களின் திருமணம் பிரமாண்ட கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது.
தற்போது தம்பதியாக சினிமாவில் வலம் வரும் நாக சைதன்யா- சோபிதா தம்பதிகள், ஜோடியாக நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்.
மனைவியுடன் வந்த நாக சைத்தன்யா
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாக சைத்தன்யா- சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தண்டேல்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழுவினர் வெற்றி விழா நடத்தியுள்ளனர்.
அதில், நாக சைத்தன்யா அவருடைய மனைவி சோபிதா துலிபாலாவுடன் கலந்து கொண்டுள்ளார். நாக அர்ஜுனாவும் உடன் வந்திருந்தார்.
விழாவிற்கு வந்ததுடன் நிறுத்தாமல் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளனர். அதில் சோபிதா சிரித்து மகிழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |