தற்கொலை செய்ய நினைத்த ஏ.ஆர்.ரகுமான்... நம்பமுடியாத அதிர்ச்சி தகவல்
முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான் ஒரு காலத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்றுள்ளதாக தற்போது கூறியுள்ளார்.
ஏ.ஆர் ரகுமான்
கோலிவுட்டில் சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக வலம்வரும் ஏ.ஆர்.ரகுமான் இளைஞர்களுக்கு சிம்ம சொப்பமான இருந்து வருகின்றார்.
முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை பிரமிக்கவைத்த இவர், அதன் பின் பல ஹிட் ஆல்பம் கொடுத்து ரசிகர்களிடம் அசைக்கமுடியாத இடத்தையும் பிடித்துள்ளார்.
குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை
இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். அதில் அவர், 'எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என்னுடைய அம்மா, "நீ மற்றவர்களுக்காக வாழும் போது அந்த மாதிரியான எண்ணம் தோன்றாது" என என்னிடம் கூறினார்'.
'உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம். உணவு வாங்கி கொடுக்கலாம் அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம்.
இந்த மாதிரியான விஷயங்கள் தான் வாழ்க்கை உடன் உங்களை பயணிக்க வைக்கும்' என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |