இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் அக்கா என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் அக்கா விவசாயம் செய்யும் தகவல் இணையத்தில் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரகுமானின் அக்கா பெயர் ஏ ஆர் ரெய்ஹானா.
இவருடைய மகன் தான் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ்.
திடீரென்று திரண்டு வந்த அலைகள்.....அடுத்த நொடியே காத்திருந்த ஆச்சரியம்!
இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் உடைய அக்கா ஏ ஆர் ரெய்ஹானா உடைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதில் அவர் ரகுமான் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு சிறு வயதிலிருந்தே தோட்டக்கலையில் அதிக ஆர்வம் இருந்தது.
காலை எழுந்தவுடன் தண்ணீருடன் இதை மட்டும் சாப்பிட்டால் போதும்! 5 நிமிடத்தில் நடக்கும் அதிசயம்
அது மட்டுமில்லாமல் உடம்பு சரியில்லாத போது மருத்துவர் ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். அதனால் நான் ஆர்கானிக் உணவுகளை தேட ஆரம்பித்தேன்.
அதற்கு பிறகு தான் ஆர்கானிக் உணவுகளை தயாரிக்க தோட்டத்தை உருவாக்கினேன். இதற்கென்றே நான் தனியாக நிலம் வாங்கி தோட்டத்தை உருவாக்கினேன்.
என்னுடைய தோட்டத்தில் மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா போன்ற பல பழவகைகள், பூக்கள், காய்கறிகள் என்று எல்லாமே வைத்திருக்கிறேன்.
சனி கோச்சாரத்தில் ராகு கேது இணைவதால் ஏற்படும் அதிர்ஷ்டம் என்ன?
அதிகம் என்னுடைய தோட்டத்தில் பழ வகைகளும், பூக்களும் தான் உள்ளது. காய்கறி வகைகள் இன்னும் அதிகமாக போடவில்லை.

இனிமேல் பண்ணுவேன். மேலும், என்னுடைய தோட்டத்தில் செயற்கை உரங்கள் எதுவும் போடுவதில்லை. இயற்கை உரம் மட்டும்தான்.
மழைநீர், நாங்கள் விடும் தண்ணீர், ஆட்டு உரம்,மாட்டு உரம் என்று இந்த மாதிரியான உரங்கள் தான் போடுவோமே தவிர வேறு எந்த செயற்கை உரங்களையும் போடுவதில்லை.
மேலும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் இயற்கை தாவரங்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். அவரும் தோட்டம் வைத்திருக்கிறார். ஆனால், அவரால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.
ஏனென்றால், அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். அவர் வீட்டில் விளைந்து வரும் காய்கறிகளை தான் நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் வீட்டில் இருக்கும் ஒரு வகை மாம்பழம் வகை மிக சுவையாக இருக்கும்.
என்னுடைய மகன் ஜிவி பிரகாஷ்க்கு தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கிறது. அதே போல் அவருக்கு கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் உண்டு.
இன்னும் நிறைய மரக்கன்றுகளையும், செடிகளையும், காய்கறிகளையும் பக்கத்து தோட்டத்தில் நட்டு இருக்கிறேன் என்று தன்னுடைய தோட்டம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.