ஹீரோயினை மிஞ்சிய ஏ.ஆர்.முருகதாஸின் மகள்! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இவர் முதன் முதலாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானர். அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு,கத்தி, சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
பன்முக திறமையைக் கொண்ட இவர், இளம் வயதில் கல்லூரியில் அதிகமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர் முதலில் பி கலைமணியிடம் மீனாட்சி என்ற படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய இவர், கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில், தனது குடும்பத்தினரை அவ்வளவாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததில்லை.
ஹீரோயினை மிஞ்சிய மகள்
தற்போது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் குடும்பத்துடன் செல்லும் இவர், தனது பிள்ளைகளை அடிக்கடி படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வாராம்.
விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போது கூட அவர்கள் இருவருமே விஜயயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து பேசியுள்ளனராம்.
இந்நிலையில் முருகதாஸ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.