ஏப்ரல் மாத கடைசி குரு உதயம்! கஷ்டத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
மேலும் பெயர்ச்சிகள், இடம்பெயர்வுகள் ராசிகளிம் அதிகம் தாக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் ஏப்ரல் 22, 2023 அன்று, குரு பெயர்ச்சி அடைந்தார்.
மேஷ ராசியில் ஏப்ரல் 27 அன்று குரு உதயமாகப்போகிறார். இதனை தொடர்ந்து பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பணத்திற்கு பஞ்சமே இருக்காது மற்றும் அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்.
இதன்படி, ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குருபெயர்ச்சியில் அடிப்படும் ராசிக்காரர்கள்
1. மேஷம்
குரு பெயர்ச்சி அதிகம் ஏற்படுவதால் பண இழப்பு, வேலை அல்லது வியாபாரத்தில் பிரச்சினைகள் எழும். இதனை தொடர்ந்து ஆரோக்கியத்திலும் இந்த பெயர்ச்சி தாக்கம் செலுத்தும். இதனால் செய்யும் வேலைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
2. ரிஷபம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் இந்த காலப்பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த காலப்பகுதியில் பண இழப்பு ஏற்படும். மேலும் வேலை இழக்கும் அபாயம் இருப்பதால், வேலையிலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
3. கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் ஆரம்பத்திலேயே பிரச்சினை ஆரம்பித்து விடும். நிற்கும் இடம், செல்லும் இடம் என எல்லா இடங்களிலும் இவர்களுக்கு பிரச்சினை இருக்கும். மேலும் பெயர்ச்சியால் சனி இந்த ராசியில் தான் வந்து நிற்கிறார்.
4.துலாம்
ஏப்ரல் 27 முதல் கடின உழைப்பு தேவை. இல்லாவிட்டால் அனைத்த சொத்துகளும் பிரச்சினையில் சிக்கும். இவர்களில் இருக்கும் சிறு தவறுகளும் பெரியதாக இருக்கும். மேலும் வியாபாரத்தில் பண இழப்புக்கள் ஏற்படும்.
5. விருச்சிகம்
வாயை சற்று கவனமாக வைத்திருக்க வேண்டும். இதனால் பல பிரச்சினைகள் வீட்டு வாசலை தேடி வரவிருக்கிறது. மேலும் உழைப்பில் அதிகமான கவனம் இருக்க வேண்டும். இது தான் இவர்களுக்கான கடைசி வாய்ப்பு.
முக்கிய குறிப்பு
இது சாதாரண குறிப்பு மாத்திரமே பூரண விளக்கத்தை ஜோதிடரின் சென்று தெரிந்து கொள்ளவும்.