வயிறு ஏன் இப்படி இருக்கு- 11 நாட்கள் முன் எச்சரித்த நடிகர்
எதிர்நீச்சல் மாரிமுத்து இறப்பதற்கு 11 நாட்களுக்கு முன்னரே அவரது உடல்நிலை குறித்து எச்சரித்ததாக நடிகர் அப்பல்லோ ரவி கூறிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் மாரிமுத்து
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் பணிப்புரிந்து சாதித்த ஒரு நபர் தான் நடிகர் மாரிமுத்து.
இவர் கோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களான வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் பணிப்புரிந்துள்ளார்.
மாரிமுத்து இயக்கத்தில் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் அது அவருக்கு சரியான வரவேற்பை பெறவில்லை.
இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது.
அத்துடன் மாரிமுத்து பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மரணம் குறித்து எச்சரித்த பிரபலம்
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத நிலையில், மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.
இவரின் இறப்பு குறித்து நடிகர் நடிகர் அப்பல்லோ ரவி ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், “ என்ன அண்ணே வயிறு ஜெமினி மேம்பாலாம் மாதிரி இருக்கிறது என்று கேட்டேன்.
அதற்கு மாரிமுத்து,“ ஏன் அப்பல்லோ இப்படி கேட்குற. நான் என பேஷண்ட்டா என கேட்டுவிட்டு பாரு ஆரோக்கியமாகத்தான் இருக்கேன் ” என கடுப்பில் கத்தியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் “ இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உரிய மருத்துவரை பார்க்க வேண்டும்.” என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |