சென்னையில் ஐபோன் 15 சீரிஸ் உற்பத்தி! என்னென்ன அம்சங்கள் இருக்குதுனு தெரியுமா?
ஐபோன் 15 உற்பத்தியை ஆப்பிள் இன்க் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் 15
ஆப்பிள் இன்க் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழும ஆலையில் முழுவதும் புதிய ஐபோன் மாடல்களின் உற்பத்தியை தொடங்க இருக்கின்றது.
குறித்த போன் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சீனாவில் உள்ள ஆலையிலிருந்து வினியோகம் தொடங்கிய பின்பு, தமிழகத்திலிருந்து புதிய யூனிட் அனுப்பப்பட உள்ளதாம்.
புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தியை தொடங்க இருக்கும் நிலையில், அவற்றிற்கான உபகரணங்களும் அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், சென்னையில் உற்பத்தி ஆலையும் தயாராக இருக்கின்றது.
ஐ போனில் இத்தனை மாடலா?
ஐபோன் 15 சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ பிளஸ் என ஐந்து மாடல்கள் இடம்பெறுவதாக தெரிகின்றது.
புதிய ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படுவதாகவும், ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஏ17 பயோனிக் சிப்செட், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் குறைந்தபட்ச ஸ்டோரேஜ் 256 ஜிபி-யாக உயர்த்தப்படு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |