ஆப்பிள் ஐ போன் வைத்திருப்பவர்களுக்கு ஆபத்து: உடனே இதை செய்திடுங்க
உலகளவில் பெகாசஸ் ஸ்பைவேரின் லீலைகள் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில் பல்வேறு பாதுகாப்புகளைக் கொண்ட விஐபிகளின் செல்போன்கள் பெகாசஸ் என்ற மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு போன் கால்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.
செல்போனிலிருந்து முக்கியமான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. விஐபிகளை உளவு பார்க்க இந்த பெகாசஸ் பயன்பட்டுள்ளது.
இந்தியாவிலும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, முன்னாள் தேர்தல் ஆணையர் என 300 பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த இயங்குதளத்தில்தான் ஹேக்கர்கள் கைவரிசை காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய இந்த இயங்குதளத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது memory corruption vulnerability என்றழைக்கப்படும் இந்த bug-ஆல் உங்களுடைய ஐபோன்/பேட் மெமரிக்குள் சென்று வீடியோ, போட்டோக்களை ஹேக்கர்களால் மிக எளிதாக திருட முடியும்.
தற்போது இதனைச் சீர்செய்யும் விதமாக iOS 14.7.1, iPadOS 14.7.1 என ஐபோன், ஐபேடுக்கு தனித்தனியே இயங்குதளங்களை (OS) உருவாக்கி ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்த அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் கூட்டப்பட்டுள்ளன. இதனால் ஹேக்கர்களால் உங்கள் ஐபோனையோ, ஐபேடையோ நெருங்க கூட முடியாது. ஆகவே அனைவரும் உடனடியாக OS அப்டேட் செய்யுமாறு ஆப்பிள் நிறுவனம் தங்களது பயனர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் CERT-in என்றழைக்கப்படும் இந்திய கணினி அவசரகால எதிர்வினைக் குழு ஆப்பிள் போன்கள், பேட்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த அப்டேட்களை உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் மொபைல், ஐபேடில் Settings > General > Software Update என்ற வசதியின் மூலம் பாதுகாப்பு நிறைந்த புதிய இயங்குதளங்களை அப்டேட் செய்துகொண்டால் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.