அப்பப்பா... தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமாம்
‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்லத் தேவை இல்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஏனென்றால், ஆப்பிளில் வைட்டமின்களும், புரதச் சத்தும் நிறைந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், ஆப்பிளில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிகளவில் உள்ளன.
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை கொடுக்கும் என்பதைப் பார்ப்போம் -
புற்றுநோய்க்கு
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், ஆப்பிளில் குவர்செடின் சத்து அதிகம் உள்ளதால், இருதய நோய், நுரையீரல், மார்பகம், பெருங்குடல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
உடல் எடை குறைக்க
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவி செய்யும். மேலும், உடல் பருமனை குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், ஆப்பிளில் வைட்டமின் சி சத்து இருப்பதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
கண்களுக்கு
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால் நமக்கு கண்புரை நோய் வராமல் உதவி செய்யும். மேலும், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மலச்சிக்கலுக்கு
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், மலச்சிக்கல், வாயு பிரச்சனை சீக்கிரம் குணமாகும்.
சுவாச பிரச்சினைக்கு
தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், நம் மூச்சுக்குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து சுவாச பிரச்சனையை தடுத்துவிடும்.