அப்பள பிரியருக்கு ஒரு அதிர்ச்சி செயல்... இனி சாப்பிடும் முன்பு யோசித்து சாப்பிடுங்க
அப்பளம் அதிகம் சாப்பிடுவது உடம்பிற்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்றும் இதனை அளவோடு சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகின்றது.
அப்பளம்
அப்பளம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு ஆகும். இவற்றினை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
Karuppu Ulunthu Chutney: அசத்தல் சுவையில் சட்னி வேண்டுமா? கருப்பு உளுந்து கார சட்னியை செய்து பாருங்க
மேலும் இதில் கொழுப்பு அதிகம் உள்ளதுடன், எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் போது கொழுப்புச்சத்து அதிகமாகவே இருக்கின்றது.
இது உடல் எடையை அதிகரித்து, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
அப்பளத்தில் சோடியம் அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்பளத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது சத்து குறைபாடு ஏற்படுகின்றது. தேவையான ஊட்டச்சத்தும் உடம்பிற்கு கிடைக்காமல் இருக்கின்றது.
எனவே, அப்பளத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், அதை மிதமாக சாப்பிடுவது நல்லது.
அப்பளத்திற்கு பதிலாக உருளைக்கிழங்கு அல்லது காய்கறி சிப்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |