ஆண்களை குறிவைத்திருக்கும் பேராபத்துக்கள்! கட்டுப்படுத்த முடியாத நோய்கள் இதோ
பொதுவாக இன்றைய சூழலில் பெண்களை விடவும் ஆண்களே நீண்ட கால நோய்களில் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் தற்போது இவர்களின் வேலைப்பளு அதிகமாக காணப்படுகிறது.
ஆண்களுக்கு சக்தியை தரும் உணவுகள் பழக்கவழக்கங்கள் தற்போது அரியதாகி வருகிறது. இதனால் தான் நோய்களின் தாக்கம் அதிகமாகிறது. உதாரணமாக இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் மனச்சோர்வு நோய்களை குறிப்பிடலாம்.
அந்த வகையில் ஆண்களில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இருதய நோய்
ஆண்கள் பொதுவாக புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இது போன்று காணப்படுவர்களிடம் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய் நிலைமைகள் காணப்படும்.
மேலும் இதன் தாக்கத்தினால் வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்படும், மேற்குறிப்பிட்ட பழக்கங்கள் தொடருமாயின் நோயின் தாக்கம் அதிகரித்து மரணம் ஏற்படலாம்.
புற்றுநோய்
அடுத்தபடியாக ஆண்களை தாக்கும் நோயாக புற்றுநோய் காணப்படுகிறது. இது தோல், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் நுரையீரல் போன்ற இடங்களில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்று தாக்கங்கள் ஏற்படும் போது சன்ஸ்கிரீனைத் தவறாமல் பயன்படுத்துதல், மது மற்றும் புகையிலையைத் தவிர்த்தல், சிவப்பு இறைச்சி உட்கொள்வதைக் குறைத்தல் இவையனைத்தும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயின் தாக்கம் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் இருக்கும் ஆனால் இதன் தாக்கம் ஆண்களுக்கே அதிகமாக காணப்படும். இதன் தாக்கங்களாக அதிக சிறுநீர் கழித்தல் மற்றும் அதிகபடியான தாகம் என்பவற்றை கூறிப்பிடலாம்.
இது உடலில் அதிகப்படியான குளுக்கோஸை இரத்த நாளங்கள் கொண்டு செல்கிறது. இது காலப்போக்கில் மாரடைப்பு, பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் உறுப்பு துண்டித்தல் உட்பட பல நோய்களை ஏற்படுத்தும்.
தீர்வு
இது போன்ற பிரச்சினைகளை மருந்தை விட உணவு பழக்கங்கள் மூலமாகவே கட்டுபடுத்த முடியும். இது நிரந்தர தீர்வளிக்கிறது. அந்த வகையில் நோய் நிலைமைகளை கட்டுபடுத்தும் உணவுகளை கீழுள்ள வீடியோ பதிவில் தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும்.