பெருநாடி அனீரிசம்(Aortic Aneurysm): அறிகுறிகளும், சிகிச்சைகளும்
பெருநாடி அனீரிசம் என்பது உடலின் முக்கிய தமனியான பெருநாடியின் சுவரில் ஏற்படும் ஒரு வீக்கம் ஆகும், இது பெருநாடி(aorta) என்று அழைக்கப்படுகிறது.
வயிற்றில் ரத்தக்குழாய் வீக்கம்
நமது உடலுக்கு இரத்தத்தை வழங்கும் முக்கியமான பணியை செய்வது இரத்த நாளமான தமனியாகும்.
இது உங்களுடைய இருதயத்திலிருந்து மார்பு வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. இதில் ஏற்படும் வீக்கத்தையே பெருநாடி அனீரிசம் என குறிப்பிடுகிறார்கள், வயது மூப்பு அதிகரிக்கும் போது வயிற்றில் உள்ள தமனியின் சுவர் பலவீனமடையலாம் அல்லது விரிவடையத் தொடங்கலாம், இதனால் பாதிப்படைகிறது.
பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை இதற்கான சோதனை மிகவும் பொதுவான ஒன்றே.
இரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம் பெரிதாகி பலவீனமடையும் போது, உட்புறத்தில் ரத்தக்கசிவு ஏற்படலாம், இதன் காரணமாக 100ல் 85 பேர் மரணமடைகின்றனர்.
3 செ.மீட்டருக்கும் 5.4 செ.மீட்டருக்கும் இடையிலான அளவில் பெரிதாக இருந்தால் இது ஆபத்தான ஒன்றே.
இதன் வகைகள்,
Abdominal aortic aneurysm- வயிற்றுப்பகுதியில் ஏற்படுவதை குறிக்கிறது.
Thoracic aortic aneurysm- மார்புப் பகுதியில் ஏற்படுவதை குறிக்கிறது.
காரணங்கள்
- பெருநாடியின் சுவர் பலவீனமடைதல்
- உயர் ரத்த அழுத்தம்
- புகைப்பழக்கம்
- வயது மூப்படைதல்
- குடும்பத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால்
- தொற்றுகள், மரபணு காரணிகள்
அறிகுறிகள்
பெருநாடி அனீரிசிம்கள் அறிகுறியற்றவை, அதாவது அவை குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.
சிலருக்கு வயிற்றில் துடிப்பு போன்ற உணர்வு, முதுகு அல்லது இடுப்பில் வலி, மூச்சுத்திணறல், ரத்தத்துடன் கூடிய இருமல், முதுகு வலி மற்றும் மார்பு வலி திடீரென கடுமையான வலி இருந்தாலோ, தலைச்சுற்றலுடன் சீரற்ற இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் குறைந்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு அணுகுவது அவசியம்.
சிகிச்சைகள்
பெருநாடி அனீரிசம் உள்ளதா என்பதை அறிய வயிறு தொடர்பான அல்ட்ராசவுண்ட் ஆய்வுச் சோதனையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
இதன்மூலம் வீக்கங்களை முன்னரே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
வீக்கம் 5.5 செ.மீக்கும் குறைவாக இருந்தால் தொடர்ச்சியான இடைவெளியுடன் கூடிய பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படுகிறது. வீக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |