அரிய நோயால் அவதிப்படும் அனுஷ்கா! நண்பர்கள் சொன்ன உண்மை
பிரம்மாண்ட வரலாறு சார்ந்த படங்கள், அமானுஷ்ய படங்கள் என்று கூறினாலே ரம்யா கிருஷ்ணன், ரோஜா, சௌந்தர்யாவுக்கு பிறகு நமது நினைவுக்கு வரும் முதல் நடிகை அனுஷ்கா தான்.
அனுஷ்காவின் நடிப்புத் திறன்
ராணி, இளவரசி கதாபாத்திரமென்றால் அனுஷ்காதான் என்று கூறுமளவுக்கு தனக்கென ஒரு தனி பாணியை தன்னகத்தே கொண்டவர்.
கம்பீரமான நடிப்பு, வசீகரப் புன்னகை என்று ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் நிறையை அதிகப்படுத்தி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்து சில காலம் நடிப்பதை தவிர்த்திருந்தார்.
அனுஷ்காவின் நோய் குறித்து நண்பர்கள் கூறிய கருத்து
தற்போது, மீண்டும் படங்களில் நடித்து வரும் நிலையில், இவருக்கு அரிய வகை நோய் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது, இவருக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளதாகவும், இவர் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பார் என்றும் அனுஷ்காவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது.
இருப்பினும் இந்த தகவலில் உண்மையில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.