Doctor Prescription இல்லாமல் ஆன்டிபயாடிக் எடுத்து கொள்கிறீர்களா? அப்போ இந்த தகவல் உங்களுக்காக தான்..
கோவிட் 19 தொற்று வந்த பின்னர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கள் இல்லாமல் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவது அதிகமாகி வருவதாக ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் இணையத்தில் வரும் சில கட்டுரைகளையும் செய்திகளையும் வாசித்து விட்டு தங்களுக்கு நினைத்தப்படி மருந்துகளை வாங்கி குடிக்கிறார்கள்.
இது காலப்போக்கில் மருந்து எதிர்ப்பு திறனை உண்டு பண்ணும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் எந்த மருந்து கொடுத்தாலும் நோய் குணமாகாத நிலை ஏற்படும்.
மேலும், இந்தியாவில் ஆன்டிபயாடிக் விற்பனையைப் பொருத்தவரை 12 மூலக்கூறுகள்தான் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
அப்படியாயின், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஆன்டிபயாடிக் பயன்பாடு
1. ஆன்டிபயாடிக் பயன்பாட்டில் 12 மூலக்கூறுகள்தான் 75% எடுக்கப்படுகின்றன. இவற்றில் அசித்ரோமைசின் (Azithromycin) (500 மி.கி.) மாத்திரைகளை தான் மக்கள் அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதனை அடிக்கடி சாப்பிடும் பொழுது நீண்ட நாள் பழக்கமாகி விடும்.
2. ஒரு பாக்டீரியா சுமார் பத்து ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுபடும். அதே சமயம் அடிக்கடி மருந்துகள் எடுத்து கொள்ளும் பொழுது பாக்ரீயாவின் வீரியம் அதிகரித்து விடும். நோயாளிக்கு பாக்ரீயாவின் தாக்கம் அதிகரித்து வீரியம் கூடிய மருந்துகளை சாப்பிட வேண்டிய நிலை வந்து விடும்.
3. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தான் மருந்துகளின் பாவனை அதிகமாக உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மருத்துவர் பரிந்துரை இருந்தால் மாத்திரமே வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
