மற்றொரு பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் கைது... மாணவி கொடுத்த பரபரப்பு புகார்
சென்னை அண்ணாநகர் பிஎஸ்பிபி பள்ளியில் கராத்தே ஆசிரியரான கெவின்ராஜ் என்பவர் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை கேகே நகர் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் அதே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் சிலர் மீதும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னை அண்ணாநகர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே ஆசிரியர் கெவின்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட கெவின்ராஜிடம் பொலிசார் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும் இதனை அடுத்து அவரது நண்பர்கள் சிலரும் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மாதா, பிதா, குரு தெய்வம் என ஆசிரியர் என்றாலே புனிதமான தொழில் என்று மாறி ஆசிரியர் என்றாலே காம கொடூரன் என்று எண்ணும் அளவுக்கு ஒரு சில ஆசிரியர்களின் செயல் கொண்டு போய்விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.