Annam: பாதியில் நின்று போன விஷேசம்.. குதூகலிக்கும் ரம்யா- அன்னம் சரிச் செய்வாரா?
கார்த்திக்- அன்னம் தம்பதிகளுக்கு நடக்கவிருக்கும் தாலி பிரித்து கோர்க்கும் விஷேசம் பாதியில் நின்று போனதால் ரம்யா சந்தோஷம் அடைகிறார்.
அன்னம் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாக்கி வரும் சீரியல்களில் அன்னம் முதல் இடத்தை பிடிக்கிறது.
அன்னம் சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் தன்னுடைய மாமனாருக்கு போராடும் மருமகளின் கதையை கருவாகக் கொண்டு நகர்த்தப்படுகிறது.
மாமனாருக்காக அவருடைய மகனை திருமணம் செய்ய காத்திருந்த அன்னம் கடைசியாக கார்த்திக்கை திருமணம் செய்து கொள்கிறார்.
இது ஒருவொரு கட்டாய திருமணம் என்றாலும் அதனை சரியாக்க அன்னம் பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் சரி நடக்காது என தெரிந்து கொண்டு கார்த்திக்கின் காதலியான ரம்யாவுடன் சேர்த்து வைக்கும் முடிவில் இருக்கிறார்.
பாதியில் நின்றுபோன விஷேசம்
இந்த நிலையில், அன்னத்துடன் சந்தோஷமாக வாழ்வது போன்று கார்த்திக் தன்னுடைய அப்பாவுக்காக நடித்து கொண்டிருக்கிறார். அத்துடன் ரம்யாவும் ஏமாற்றி விட்டார் என நினைத்து ஒரு பக்கம் பழி வாங்க ஆரம்பித்து விட்டார்.
அன்னத்திற்கு தாலி பிரித்து கோர்க்கும் விஷேசம் வைக்கிறார்கள். அதற்கு ரம்யா தான் சிறப்பு விருந்தினராக வருகிறார்கள். அங்கு வந்தவர் பேசாமல் இருக்காமல் விஷேசத்தை எப்படி நிறுத்தலாம் என யோசித்து கொண்டிருக்கும் பொழுது அன்னத்தின் அப்பா வந்து விஷேசத்தை நிறுத்துகிறார்.
இதனால் ரம்யாவுக்கு அளவில்லாத சந்தோஷம் வந்துள்ளது. அதற்கு அன்னம்,“ நான் தான் உன்னை அழைக்க வேண்டாம்..” என்றேன் என கூறுகிறார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். இனி வரும் எபிசோட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
