Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
கடைசியாக கணவன்-மனைவியாக பேச வேண்டும் என ஆசைப்பட்ட ஈஸ்வரியின் உயிரை பறிக்கும் நோக்கில் குணசேகரன் செய்த வேலையால் சீரியல் சூடுபிடித்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் சீரியல் 2.
இந்த சீரியலில், பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் நபர்களின் ஆவணத்தை அடக்குவது போன்ற காட்சிகள் வகைக்கப்பட்டு சீரியல் நகர்த்தப்படுகிறது.
இதன்படி, தர்ஷன் பார்கவியுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த அன்புக்கரசி அவர்களை அறைக்குள் வைத்து அடைத்து விட்டு, அதனை பெரிய பிரச்சினையாக்கியுள்ளார்.
இதனால் பொலிஸ் பார்கவியை தனியாக அழைத்து சென்று விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு ஜீவானந்தம் உடன் அனுப்பி விட்டனர். தர்ஷனனை காதலித்த பாவத்திற்காக தன்னுடைய அப்பாவை இழந்த பார்கவி, மன வெறுத்து குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சுய நினைவை இழந்த ஈஸ்வரி
இந்த நிலையில், பார்கவியை தேடிச் சென்ற இடத்தில் பார்கவி இருந்தாலும், குணசேகரன் வீட்டிற்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டுக்கு செல்லவும் தயாராகி விட்டார்.
இப்படி இருக்கும் நிலையில், தர்ஷன் வாழ்க்கை குறித்து பேசுவதற்கான குணசேகரனை ஈஸ்வரி தனியாக அழைக்கிறார். அப்போது ஈஸ்வரி சொல்வதற்கு மறுப்பு தெரிவித்த குணசேகரன் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
நந்தினி காலையில் டீ கொடுப்பதற்காக அவருடைய அறையை திறக்க வரும் பொழுது, ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரி கிடந்தார். ஆனாலும் யாரும் உதவிக்கு வரவில்லை. குணசேகரன் வேலை என தெரிந்து கொண்ட நந்தினி தர்ஷனனை வைத்து ஈஸ்வரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவம் செய்யும் மருத்துவர், சுய நினைவு வரவில்லை என கூறி விட்டார். ஜனனி இவற்றையெல்லாம் எப்படி சமாளிப்பார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |