தவறான உறவில் இருந்தேன்! வெளிப்படையாக கூறிய நடிகை அஞ்சலி
கடந்த இரண்டு ஆண்டுகளாக தவறான உறவில் இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் நடிகை அஞ்சலி.
தெலுங்கு படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது தமிழ் சினிமா தான்.
”கற்றது தமிழ்” படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும் என கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு கதாபாத்திரமாகவே வாழ்வார் அஞ்சலி.
ஆனால் சமீப காலங்களாக திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கியே இருந்தார், கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை.
தற்போது FALL என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார், இந்நிலையில் தன்னுடைய தவறான உறவே இதற்கு காரணம் என மனம் திறந்துள்ளார் நடிகை அஞ்சலி.
அவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன், அதனால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
தன்னுடைய கெரியரை கெடுக்கும் அந்த தவறான உறவை விட, கெரியர் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
மேலும் யார் அந்த நபர் என்பது குறித்த எந்தவொரு தகவலையும் அஞ்சலி வெளியிடவில்லை.