இந்த டீம்ல சேராதீங்க... ரொம்ப மோசமானவங்க என ரசிகர் போட்ட பதிவு... அனிதா கொடுத்த அதிரடி பதில்
பிக்பாஸ் வெற்றிக்கொண்டாட்டம் நிகழ்வில் போட்டியாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ரசிகர் கொடுத்த பதிவிற்கு அனிதா தக்க பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஸில் ரியோ, நிஷா, கேப்ரில்லா ஆகியோர் அர்ச்சனாவுடன் சேர்ந்து லவ் பேட் என்ற குழுவையும் ஆரம்பித்தனர்.
ஆனால், இந்த குழுவில் இருந்த யாரும் டாப் இரண்டு இடங்களை பெறவில்லை என்பது தான் சோகம். உண்மையில் இந்த சீசன் ஆரம்பித்த போது ரியோ மீது ரசிகர்களுக்கு பல எதிர்பார்புகள் இருந்தது.
ஆனால், அர்ச்சனா உள்ளே நுழைந்த பின்னர் தான் ரியோவின் தனித்தன்மை முற்றிலும் மறைந்து போனது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி கடந்த ஜனவரி 26ம் தேதி நடைபெற்றது.
பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அனிதா சம்பத் வெளியிட்டு இருந்தார். அதில், பெண் போட்டியாளர்களான அர்ச்சனா, சம்யுக்தா, அதில், நிஷா, ஷிவானி, ஆகியோர் இருக்கின்றனர்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த டீம் கூட சேராதீங்க மோசமானவங்க என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அனிதா. எல்லாரும் நல்லவங்க தான். கேம்லாம் முடிஞ்சி போச்சு என்று பதில் அளித்துள்ளார்.