அப்பாவின் பிறந்தநாளில் அனிதா சம்பத் வெளியிட்ட கண்கலங்க வைக்கும் பதிவு!
அப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனிதா சம்பத் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் உட்பட பலரை கண்கலங்க வைத்துள்ளது.
பிரபலத்தின் பின்புலம்
பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், ஒரு நடிகையாகவும், பிக் பாஸ் பிரபலமாகவும்,டான்ஸ் டைட்டில் வின்னராகவும், விளம்பர மாடலாகவும் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் அனிதா சம்பத்.
அனிதாவின் தந்தையார் வார இதழ் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றியுள்ளார்.
இவரின் தந்தையார் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளாராம். இந்த கதையை பிக் பாஸ் சீசன் 4 கலந்துக் கொண்ட போது அனிதா சம்பத் கூறியிருந்தார்.
இதனையடுத்து அனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களில் அவருடைய தந்தை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மேலும் தன்னுடைய தந்தை மறைவிற்கு பின்னர் இப்போது தான் முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறாராம் அனிதா.
இதனை தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் அனிதா அவரின் டிக் டாக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதன்படி, அனிதாவின் தந்தை பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் அணைவரையும் கண்கலங்க வைக்கும் அளவிற்கு அவருடைய தந்தை குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வைரலாகும் பதிவு
அந்த பதிவில்,“ அப்பாவிற்கு இன்றைய தினம் பிறந்த நாள். தற்போது பதிவிடும் பதிவை நான் போன வருடமும் பதிவிட்டேன். என்னுடைய தந்தையின் பிறந்த நாள் பண்டிகை தினத்தில் வருகிறது.
இதனால் மிகுந்த சந்தோசமாக இருப்பேன். நான் தற்போது அழகான ஒரு வீடு வாங்கியுள்ளேன் இந்நேரம் என்னுடை தந்தையிருந்திருந்தால் என்னை பற்றி பெருமைபட்டிருப்பார்.
ஆனால் அவர் இப்போது இல்லை அதான் வேதனையளிக்கிறது. இது போன்று பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் அவர்கள் அந்த இடத்தை அடையும் போது அவர்கள் இருப்பது இல்லை. என்னுடைய பெற்றோர்கள் அவர்கள் இல்லாமல் என்னையும் ஏங்க வைச்சிடாங்க. என்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெற்றோருக்கும் என் உலகிற்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் அனிதாவிற்கு ஆறுதலளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.