திருமணமாகி 5 ஆண்டு காத்திருக்கும் அனிதா! வெட்கத்தை விட்டு கணவனிடன் வைத்த வேண்டுகோள்!
பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியவர் தான் அனிதா சம்பத். இதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவர், என்ன தான் சோஷியல் மீடியாவில் பிஸியாகவே இருந்தாலும், எப்பொழுதும் காதல் கணவனை சேர்ந்து புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
இதனையடுத்து, இவர்களின் 2-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கணவர் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார் அனிதா.
அந்த பதிவில், சிறந்த கணவர்! என் குடும்பத்திற்கு சிறந்த மருமகன் மற்றும் இரண்டாவது மகன் எனது நாத்தனார்கள் & மாமியாருக்கு சிறந்த சகோதரர் மற்றும் மகன்.
ஒவ்வொரு விதத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட்! என் வளர்ச்சியோட காரணமா இருந்துட்டு, ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி குடுக்க காதலை தவிர எதுவும் இல்ல! நம் காதல் போல் நாமும் வளர்வோம்!
இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் பப்பு! மேலும் 61-வது மாத காதல் ஆண்டுவிழா! சீக்கிரமா “ஐ லவ் யூ” சொல்லி தொலை. 5 வருஷமா காத்திருக்கேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.