அந்த விஷயத்திற்கு அழைத்த நபரை.. ஸ்கீரின் ஷாட் புகைப்படத்தை வெளியிட்ட அனிதா சம்பத்.. குவியும் பாராட்டுக்கள்!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு மக்களிடையே தற்போது பிரபலமானவர் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத். இவர், இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களுக்கு எல்லாம் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக ஒருவர் ஆட்கள் தேர்வு செய்யும் நபர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஒரு இளம்பெண்ணை ஒருவர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.
அந்த பெண் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதா சம்பத்திற்கு அனுப்பியுள்ளார். இதைக்கண்ட அனிதா சம்பத் சிறிதும் யோசிக்காமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், புதிய பட வாய்ப்புகள் தருகிறேன் என பல இளம் பெண்களும் இப்படித்தான் ஏமாறுகிறார்கள் எனவும், இதுபோன்ற பொய்யான அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கருத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
