அனிருத் - ஆண்ட்ரியா காதல் தோல்விக்கு காரணம் இதுதான்: மனம் திறந்து பேசிய அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி ஆண்ட்ரியா இருவரும் காதலித்து பிரேக் செய்தது குறித்து மனம் திறந்து கூறியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத்
தமிழில் தனுஷ் நடத்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத்.
இவரின் இசையமைப்பில் உருவாகும் பாடல்கள் எல்லாம் தற்போதைய இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு குஷியை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும் அதனால் இவருக்கு அடுத்தடுத்து உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இவர் இசையில் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்திற்கும் ஜவான் திரைப்படத்திற்கும் அதிக சம்பளம் வாங்கி இசையமைத்திருக்கிறார்.
அனிருத் - ஆண்ட்ரியா பிரேக்கப்
அனிருத் இசையில் மட்டுமல்ல சர்ச்சைக்கும் பெயர் போனவர். இவர் பெயரில் பல சர்ச்சை விவகாரங்கள் வெடித்திருந்தது.
மேலும், அனிருத் தன்னை விட 6 வயதிற்கு மூத்த நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவை தனது 19 வயதில் காதலித்து பிரேக்கப் செய்திருக்கிறார்கள். இவர்களின் பிரேக்கப்பிற்கு காரணம் இதுதான் என சொல்லி வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
அதில், நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை, ஆனால் காதலிக்கும் முடிவில் தான் இருக்கிறேன். தற்போது காதலிக்கும் போது என்னை விட வயதான பெண்ணைதான் காதலிப்பேன்.
நான் ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலித்தேன் அப்போது அவருக்கு 25 வயது எனக்கு 19 வயது, இது உண்மையான காதல் தானா என்று எனக்கு தெரியாது அதை நானும் பரிசித்து பார்த்ததில்லை ஆனால் நாங்கள் பிரிந்ததற்கு வயது வித்தியாசம் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இது தான் பிரேக்கப்பிற்கு காரணம் என்று சொல்ல முடியாது எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை என்பது முக்கிய காரணம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |