வாழையிலையில் ருசித்து சாப்பிடும் அனிருத், கமல்.....40 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து!
விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை கிண்டியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரம்மாண்ட விருந்து கொடுத்து அசத்தியுள்ளனர். உலகநாயகன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஸ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து வாழையிலையில் ருசித்து ருசித்து சாப்பிடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவ்வளவு உணவுகளா?
நாட்டுக்கோழி சூப், முருங்கை கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சுப்போட்ட வறுவல், வஞ்சரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்சிகன் டாகோஸ், ஜலபேனோ சீஸ் சமோசா, கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைதா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா என 40 வகையான உணவு பதார்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.