உலகமே அழிந்தாலும் அழியாத பூச்சி எது தெரியுமா? அழிவே இல்லையாம்
தற்போது நிலவி வரும் பிரச்சினைகளில் பல அணு ஆயுதங்கள் போர்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி மோசமாக இருக்கும் நாட்கள் கடந்தால் அது உலகத்தின் அழிவை தீர்மானிக்கும் காரணியாக மாறி விடும்.
தற்போதும் கூட பல உயிர் சேதங்கள், கட்டிடங்கள், உணவின்மை, நீர்யின்மை, குழந்தைகளின் மரணம் உள்ளிட்டவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கவலையை கூட அலட்சியமாக சமூக வலைத்தளங்களில் பகிரும் மனிதர்களாக இருக்கிறோம். இப்படியான சூழ்நிலைகளிலும் அழியான ஒரு உயிரினம் இருக்கிறது என்றால் அது என்ன தெரியுமா? நிச்சயம் மனிதர் இல்லை.
இந்த விலங்குகளுக்கு விசித்திரமான அளவில் கதிர்வீச்சையோ அல்லது பட்டினியையோ தாங்கும் அளவுக்கு சக்தி உள்ளது.
முழு பூமியும் அணுசக்தி வீரியத்தில் சிக்கிக் கொண்டாலும் இவை அவற்றின் வாழ்க்கையை சிறப்பாக வாழும். அப்படியான உயிரினங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கரப்பான் பூச்சி | சமையலறை அலமாரிகளில் மறைந்து வாழும் பூச்சிகளில் ஒன்று தான் கரப்பான் பூச்சி. இந்த கரப்பான் பூச்சிகள் 20% அதிக அளவிலான அணு-குண்டு கதிர்வீச்சை தாங்கும். 10,000 ரேட்ஸ் வரை தாங்கும். ஜப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட பொழுதும் கூட அந்த இடத்திலிருந்து 1000 அடி தூரத்தில் இருந்த கரப்பான் பூச்சிகள் முற்றிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன. |
தேள் | தேள்களுக்கு மற்ற உயிரினங்களை விட அணு ஆயுதத் தாக்குதல்களில் இருந்து சிறப்பாகத் தப்பிக்க முடியும். இவை மிக அதிக அளவிலான UV கதிர்வீச்சுகளை தாங்கும் தன்மையை கொண்டிருப்பதாகும். மேலும் சில வகை தேள்கள் இருட்டில் கூட ஒளிரும் உடலமைப்பை கொண்டிருக்கின்றன. இவை பனியில் முழுமையாக உறைந்து போனாலும் மீண்டும் உயிர் பெற்று வாழும். |
பழ ஈக்கள் | கோடை காலத்தில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்களின் மீது வாழும் உயிரினம் தான் இது. இவை கதிர்வீச்சின் 64,000 ரேட்ஸ் வரை உயிர்வாழ கூடியவை. மேலும் இவற்றின் அளவு பெரிய உயிரினங்கள் தாங்குவதை விட கதீர்வீச்சை உடல் உறிஞ்சும். வாழ்க்கை சுழற்சி 30 நாட்கள் மட்டுமே இருந்தாலும், அணுகுண்டின் கதிர்வீச்சால், இவை இன்னும் 30 நாட்கள் வரை உயிடுடன் வாழும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |