பல அடி உயரத்திற்கு செங்குத்தான மலை சுவர்களில் ஏறிய ஐபெக்ஸ் - வியப்பூட்டும் வீடியோ!
பல அடி உயரத்திற்கு செங்குத்தான மலை சுவர்களில் ஏறிய ஐபெக்ஸ் ஆட்டின் வியப்பூட்டும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செங்குத்தான மலை சுவரில் ஏறிய காட்டு ஆடு
ஐபெக்ஸ் என்னும் காட்டு மலை ஆடு ஒரு விசித்திரமான குணம் கொண்டவை. இவை ஆசியா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உயிர் வாழ்கிறது. இவை குறுகிய, பரந்த தலையை கொண்டிருக்கும். இதன் கொம்புகள் நீண்டு வளரும்.
இதன் ரோமம் பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருக்கும். அடி வயிறு வெள்ளையாக காணப்படும். இதன் தனி சிறப்பு என்னவென்றால் செங்குத்தான உயரம் கொண்ட மலைகளில் ஏறும் திறன் கொண்டவை. தன்னை மனிதர்கள் வேட்டையாமல் இருப்பதற்காக ஐபெக்ஸ் மலைகளில் ஏறி தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காட்டு மலை ஆடுகள் செங்குத்தான மலைகளில் ஏறுகிறது.
இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
Gravity causes bodies on Earth to fall towards the ground; however, the alpine ibex seem it doesn't care at all
— Massimo (@Rainmaker1973) May 21, 2023
Its herbivorous diet is lacking in calcium salt, so it typically climbs dams' steep walls to reach deposits of mineral salts from the stonespic.twitter.com/9OHpNOA1CU