இந்த நாட்டில் 15 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு... காரணம் என்ன தெரியுமா?
பல நாடுகளிலும் விலங்கினங்களை ஏலம் விடுவது வழக்கம் தான். நம் நாட்டை பொறுத்தவரையில் பண்டிகை காலத்தின் போது ஆடுகளை ஏலம் விடுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், ஆஸ்திரேலியா நாட்டில் மார்ரகேஷ் (Marrakesh) என்ற ஆடு 21,000 டாலரில், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15.6 லட்சம் விலையில் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
இந்த ஆட்டை வாங்கியவரின் பெயர் ஆண்ட்ரூ மோஸ்லி (Andrew Mosley). இந்த ஆட்டை இவ்வளவு செலவழித்து ஏலத்தில் எடுத்துள்ள Marrakesh ஆடு மிகவும் ஸ்டைலாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு, முன்னதாக ப்ரோக் (Brock) என்ற பெயருடைய ஆடு இந்திய மதிப்பில் ரூ.6.40 லட்சத்துக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது வந்துள்ளது. ஆண்ட்ரூ மோஸ்லி மாடு பண்ணை ஒன்றை வைத்து இருக்கிறார்.
அந்த பண்ணையில் ஆடுகள் மற்றும் சில கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்த Marrakesh ஆட்டை ஏன் இவ்வளவு விலை கொடுத்து ஏலத்தில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை ஆண்ட்ரூ மோஸ்லி தெரிவித்து இருக்கிறார்.
அப்போது, Marrakesh ஏன் விலை உயர்ந்தது என்றால் அவற்றின் இனம் மிக அரிதானது என கூறினார். இதனிடையில், ரூ.15.6 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கும் மார்ரகேஷ் ஆடு, குயின்ஸ்லாந்து எல்லைக்கு அருகில் வளர்க்கப்பட்டது.
மேலும், Cobar-ல் நடந்த விற்பனையின் போது இந்த இனத்தைச் சேர்ந்த 17 ஆடுகள் மட்டுமே இருந்தன.
தற்போது வாங்கி இருக்கும் ஆடு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால், நல்ல கருவுறுதல் விகிதத்தை (good fertility rate) கொண்டிருக்கும் என்று தான் கருதியதாக தெரிவித்தார்., எனவே தான் அதை வாங்கியதாகவும் ஆ-ண்-ட்-ரூ மோஸ்லி கூறி இருக்கிறார்.