மேடையில் அசிங்கப்பட்ட அனிகா! நயன்தாரா கூட இப்படி செய்தது இல்லை: விளாசும் நெட்டிசன்ஸ்
தனது படத்தின் ப்ரொமோஷனில் கலந்து கொண்ட அனிகா வயதுக்கு மீறி நடந்துகொண்ட சம்பவம் கடும் விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவம் பிரபலமானார்.
அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.
வயதுக்கு மீறிய செயல்
நடிகை அனிகா முதல் படத்தில் சுடிதார் அணிந்து நடித்த நிலையில், இரண்டாவது படத்தில் பயங்கர கவர்ச்சியில் நடித்து்ள்ளார். மேலும் ஓ மை டார்லிங் படத்தில் நடித்த முத்தக்காட்சி பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் கதைக்கு இது தேவை என்று இயக்குனர் கூறியதால் இவ்வாறு நடித்ததாக அனிகா விளக்கம் அளித்த நிலையில், இப்படத்தின் ப்ரொமோஷனில் கலந்து கொண்டுள்ளார்.
இதில் இவர் வயதுக்கு மீறி நடந்து கொண்ட விதம் தான் சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. விழா மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது மட்டுமின்றி, அவரை பேச அழைத்த போது ஓவராக ரியாக்ஷன் கொடுத்து, ஓவர் ஸ்டைலாக நின்று பேசியுள்ளார்.
இதனை அவதானித்த பலரும் நயன்தாரா கூட இப்படி ஆட்டிடியூட் காட்டியது இல்லை... 18 வயதில் இந்த அலப்பறையை தாங்கமுடியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
You May Like This Video