முகம் வீங்கிய நிலையில் பிரபல நடிகை! நடந்த கொடுமை தான் என்ன?
தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான அனிக்கா விக்ரமன் தனது முன்னாள் காதலன் தன்னை அடித்து தும்புறுத்தியதாக புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல் ரசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் காதலரின் மோசமான தாக்குதல்
தென்னிந்தியா நடிகைகளின் ஒருவரான அனிக்கா விக்ரமன் நீண்டக்காலமாக அனூப் பிள்ளை என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் தன்னை அதிகமாக காயப்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான விசாரனைகள் மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த காதலர் அனிக்காவை பல வருடங்களாக மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அனிகா கூறுகையில், இது மாதிரியான செயல் கடந்த காலத்திலும் நடந்ததாகவும் அது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
காதலரை மிரட்டிய அனிகா
அதில், இது போன்று என்னை அடித்தால், பொலிஸில் புகார் கொடுப்பேன் எனக் கூறியுள்ளார். அப்போது இப்படி செய்யமாட்டேன் எனக் கூறி மன்னிப்பு கேட்டார் அதனால் தான் மன்னித்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது காதலரால் தாக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததுடன், இது தொடர்பாக பொலிஸாருடன் பகிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ நான் ஷீட்டிங்கிற்கு செல்ல முற்பட்ட போது என் மீது ஏறி என்னை இப்படி சரமாறியாக தாக்கி விட்டார். இது எனக்கு மிகுந்த வறுத்ததை அளிக்கிறது. என்னுடைய போனையும் உடைத்து விட்டார்” எனவும் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், குறித்த இளைஞரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.
இதனை பார்த்த அனிகா ரசிகர்களும் “காதலரின் இந்த செயலுக்கு பின்னால் என்ன இருக்கிறது என சரியாக தெரியாமல் முடிவு எடுக்க முடியாது ”என கவலை தெரிவித்து வருகிறார்கள்.