“இந்த வியாதிக்கு மருந்தே இல்ல” புற்றுநோயுடன் போராடும் அங்காடித்தெரு சிந்து
அங்காடித் தெரு திரைப்படத்தின் மூலம் பலருக்கு பரீட்சயமானவர் தான் சிந்து. 14 வயதில் திருமணம் முடிந்து அதே வருடத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறி கணவரின் கொடுமை தாங்க முடியாமல் அப்பா வீட்டிற்க்கு வந்து நடிக்க ஆரம்பித்தார்.
இவர் சிலகாலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதற்கு காரணம் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மேலும், இவரின் சிகிச்சைக்கு உதவ யாரும் இல்லை என அழுது புலம்பியிருக்கிறார்.
அந்த நோயோடு அவர் தினமும் போராடி வந்தாலும் தன்னுடைய வாழ்க்கையின் மறுபக்கத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
எந்தப் பெண்ணும் தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோகங்களை அனுபவிக்க கூடாது என அழுதுவாறு கூறியிருக்கிறார். சிந்துவின் கதையை கேட்ட ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும், இவர் சினிஉலகம் செய்திசேவைக்கு பேட்டி கொடுத்த வேலையில் தான் நோயுடன் போராடிக் கொண்டிருப்பதை கண்ணீரோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்தவகையில், சிந்து தனது வலி, வேதனைகளை எம்முடன் பகிர்ந்துக் கொண்ட தகவல்களை தெரிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்.