ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு கடையல்... இப்படி செய்து பாருங்க
மதியம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு வழக்கமான பருப்பு குழம்பு போல் இல்லாமல், மிகவும் எளிமையாக முறையில் ஆந்திரா பாணியில் அட்டகாசமான சுவையில் தக்காளி பருப்பு கடையல் செய்ர் அசத்துங்க.
பருப்பில் அதிகளவில் புரதமும் தக்காளியில் வைட்டமின் சியும் செறிந்து காணப்படுவதால் வாரம் ஒரு முறையாவது இந்த கடையலை குழந்தைகளுகக்கு செய்து கொடுத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
தக்காளி பருப்பு கடையலை வெறும் பத்தே நிமிடத்தில் எளிடையாக எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பருப்பு : 1 கப் அளவு
தக்காளி: 3
வெங்காயம்: 1(பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் : 3-4
பச்சை மிளகாய்: 2
உப்பு: தேவையான அளவு
மஞ்சள்: சிட்டிகை
மிளகாய் : 1 தே.கரண்டி
புளி : சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு : 1 தே.கரண்டி
சீரகம் : 1 தே.கரண்டி
பெருங்காயம் : சிட்டிகை
அளவு வெந்தயப் பொடி : சிட்டிகை அளவு
கறிவேப்பிலை : சிறிது
நெய் : 2 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் : 2
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளி பழத்தை போட்டு 5 நிடங்கள் வரையில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் துவரம் பருப்பை சுத்தம் செய்து குக்கரில் போட்டு 4 தொடக்கம் 5 விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகளையும் அதில் சேர்த்து சிறிது மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி வேகவிட வேண்டும்.
பின்னர் நன்றாக கிளறிவிட்டு , குக்கரில் இருந்து ஆறிய பருப்பை எடுத்து நன்றாக மசித்து, அதை வேகவைத்த தக்காளியுடன் சேர்த்து நன்றாக மசித்துவிட வேண்டும்.
அதனையடுத்து ஊறவைத்த புளி மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பருப்பு கெட்டியாகும் வரையில் நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இரண்டு தே.கரண்டி நெய்யை போட்டு உருகியதும் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை வெந்தய பொடி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதனுடன் தக்காளி விழுது சேர்த்து பருப்புடன் கலந்துவிட்டால் ,சுவையான தக்காளி பப்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |