ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி! ஒருதடவை வைத்துப் பாருங்க
அசைவ உணவுப்பிரியர்களுக்கு பிடித்த ஆந்திர ஸ்டைல் பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிக்கள் - அரை கிலோ
எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளது
கரம் மசாலா - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 12
புதினா அல்லது மல்லித்தழை - 1 கப்
இஞ்சி துண்டு - சிறியது
பூண்டு - 10 பல்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 2
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மிளகாய், புதினா , இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, ஏலக்காய் இவற்றினை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில்ல் சிக்கனை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்றாக பிசைந்து 45 நிமிடம் ஊற வைக்கவும்
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தொடர்ந்து வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை அதனுடன் சேர்த்து மிதமான தீயில் ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை ஒரு 30 நிமிடம் வேகவிட்டு, கிரேவி பதத்திற்கு வந்தவுடன், கரம்மசாலாவைத் தூவி இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
