ஒரு மாதம் வரைக்கும் கெட்டுப்போகாத ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் எப்படி செய்வது?
நாம் எத்தனைனோ சிக்கன் ரெசிபிக்களை செய்திருப்போம். அதே போல நிறைய வகையான ஊறுகாய்களை சாப்பிட்டு இருப்போம்.
ஆனால் பெரும்பாலானோர் சிக்கன் ஊறுகாய் சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்லை.இந்த ரெசிபி வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறந்த உணவாகும்.அதுவும் இந்த ஆந்திரா சிக்கன் ஊறுகாய் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த ஆந்திரா சிக்கன் ஊறுகாய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் ஊற வைக்க
- 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் உப்பு
- மசாலா அரைக்க
- 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதை
- 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
- 1 டேபிள்ஸ்பூன்கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 3பட்டை
- 4 லவங்கம்
- இஞ்சி பூண்டு அரைக்க
- 20-25 பூண்டு பல்
- 2 இன்சு இஞ்சி
- ஊறுகாய் செய்ய
- 1 கப் நல்லெண்ணெய்
- 1/4 கப் மிளகாய் தூள்
- 1/4 கப் உப்பு
- 1 எலுமிச்சை பழ சாறு
செய்யும் முறை
முதலில் எலும்பு இல்லாத சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பிறகு இதில் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும். இதை சிக்கனுடன் நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிக்கனை சேர்த்து பொரிக்கவும்.
சிக்கன் நன்கு வெண்ணிறமாக மாறி வர வேண்டும். பின்னர் மிக்ஸியில் இஞ்சி பூண்டை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் இன்னுமொரு பாத்திரத்தில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரை வறுக்கவும்.
இதை வறுத்து எடுத்து அது ஆறியதும் மிக்ஸியில் தூளாக அரைத்துக் கொள்ளவும். இதன் பின்னர் சிக்கன் பொரித்த கடாயில் கொரகொரப்பாக அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்.
பின்னர் இதில் சிக்கன், அரைத்த மசாலா சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறவும். பின்னர் இதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்.
எண்ணையில் அனைத்து மசாலாக்களும் ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு அடுப்பை அணைத்து ஆறவிடவும் ஊறுகாய் நன்கு ஆறிய பிறகு இதில் எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
இப்படி செய்து எடுத்தால் ஆந்திரா சிக்கன் ஊறுகாய் தயார். இதை கண்ணாடி குடுவை அல்லது பீங்கான் குடுவை வைத்து குறைந்தது அறுபது நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |