பேய்க்கு பயந்து லாக்டவுனை அறிவித்துக்கொண்ட ஊர் மக்கள் - ஆடிப்போன போலீசார்!
கொரோனா வைரஸ் குறைந்துள்ளதால் மக்கள் அன்றாட பணியை செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து இருந்தாலும், தடுப்பூசிக்கு பின் இயல்பு வாழ்க்கை பலரும் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தில் ஒரே ஒரு கிராமம் மக்கள் மட்டும் பேய்க்கு பயந்து தங்களுக்கு தாங்களே லாக்டவுனை அறிவித்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சுருபுஜிலி மண்டல் கிரமாத்தில், கிராம மக்கள் கடந்த ஏப் 17ம் தேதி முதல் பேய்க்கு பயந்து தங்களுக்கு தாங்களே லாக்டவுனை அறிவித்துக்கொண்டு யாரும் ஊரை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளனர்.
இத்தகவல் குறித்து விசாரிக்கையில், இந்த கிராமத்திற்கு பேய் சாபம் இருப்பதாக அந்த மக்கள் நம்புகின்றனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு ஒரு பூஜை நடத்தி வந்தனர்.
ஆனாலும், கடந்த 3 மாதங்களில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதனால் தற்போது கிராமத்தை பேய் பிடித்துள்ளதாக நினைத்து மக்கள் எல்லோரும் பயந்துள்ளனர்.
இத்தகவல் அறிந்த போலீசார் அந்த கிராமத்திற்குள் நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அந்த கிராமத்தில் லாக்டவுன் நீக்கப்பட்டது.
தற்போது மக்கள் எல்லோரும் சகஜமாக அந்த கிராமத்திற்கு சென்று வருகின்றனர் 5 நாட்கள் அந்த கிராமமே மயானமாக காட்சியளித்தது.
இது எல்லாவற்றிற்கும் காரணம் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பூஜை நடக்கவில்லை என அந்த கிராம மக்கள் கருதுகின்றனர்.
பிரபல தமிழ் பட நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்