மிக்ஜாம் புயல் பாதிப்பு..குட்டிகளை காப்பாற்ற தாய் நாய் செய்த செயல்
மிக்ஜாம் புயலில் இருந்து குட்டிகளை காப்பாற்ற தாய் நாய் செய்த செயல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மனதை உருக்கிய நாய் பாசம்
ஆந்திர மாநிலத்திலுள்ள தாட்சாராம் என அழைக்கப்படும் கிராமத்தில் ஒரு தெரு நாய் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த நாட்களாக மிக்ஜாம் புயலால் இந்தியாவில் பல பகுதிகள் தண்ணீரால் முழ்கி பல சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
இதற்கிடையில் குட்டி போட்ட தாய் நாய் இயற்கையிடமிருந்து தன்னுடைய குட்டியை பாதுகாக்க போராடியுள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் முயற்சி
அதாவது, குழியொன்றை கால்களால் தோன்றி அதில் நாய்களை போட்டு மேலோட்டமாக மண்ணை போட்டு மூடி வைத்துள்ளது.
குழிக்குள் தண்ணீர் இறங்காமல் இருக்க அந்த குழியை ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டு மூடியுள்ளது.
மணிக்கு ஒரு தடவை குழியை தோண்டி குட்டிகளை பார்த்து விட்டு மீண்டும் மூடி விடுகிறது.
இப்படி மூன்று நாட்களும் தன்னுடைய குட்டிகளை குளிர் காற்று, கனமழை ஆகியவற்றில் இருந்து பாதுகாத்துள்ளது.
இந்த காட்சியை அருகில் வசிப்பவர்கள் பார்த்து விட்டு நாயின் பாசத்தை கண்டு வியந்து இதனை சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவாக பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகளும் வியப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |