வெளிநாட்டு அழகியை கரம்பிடித்த இளைஞர்! இந்து முறைப்படி கோலாகல திருமணம்
மொழி, இனம், நாடுகளை கடந்தது காதல், வெவ்வேறு நாட்டை சேர்ந்த இருவர் மனதால் ஒன்றிப்போய் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகள் பலவுண்டு.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் இந்தியாவில் நடந்த திருமணத்தை குறிப்பிடலாம், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் துருக்கியை சேர்ந்த பெண்ணை கரம்பிடித்துள்ளார்.
Madhu Sankeerth மற்றும் Gijem இருவருக்கும் பணிபுரியும் இடத்தில் அறிமுகமாகி நட்பாக பழகியுள்ளனர், ஒரு கட்டத்தில் வேலை காரணமாக Gijem துருக்கிக்கு சென்றுவிட, அதன்பின்னர் தான் புரிந்துள்ளது இவர்களால் ஒருவரையொருவர் பிரிந்திருக்க இயலவில்லை என்று.
தொடர்ந்து ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக்கொள்ள, முதலில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒரு கட்டத்தில் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது, ஆனால் கொரோனா காரணமாக திருமணம் தள்ளிச்சென்றுள்ளது.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் துருக்கியில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர், எனினும் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ளவே விரும்பியுள்ளார் மணப்பெண்ணான Gijem.
இந்நிலையில் சமீபத்தில் சொந்த பந்தங்கள் சூழ ஆந்திரபிரசேத்தில் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
