கொரோனாவை குணப்படுத்தும் நாட்டு மருந்து.. கட்டுக்கடங்காமல் குவிந்த கூட்டம்!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்தவர் ஆனந்தய்யா. இவர், ஒரு ஆயுர்வேத சித்த மருத்துவர், கொரோனாவுக்கு மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார்.
இதனால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று சென்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக மருந்து விநியோகத்தை அம்மாவட்ட ஆட்சியர் நிறுத்தினார். மேலும், அம்மருந்துகள் அனைத்தும் சோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில் ஆனந்தய்யா வழங்கிய ஆயுர்வேத மருந்தில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது.
மேலும், இந்த மருந்துக்கு ஆந்திர மாநில அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனாலும் அவர் வழங்கி வந்த கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.