ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன்... எப்படி செய்வது?
பொதுவாகவே சிக்கன் எந்த வகையில் சமைத்ததாலும் அருமையதன சுவை கொடுக்கும். அசைவ பிரியர்களின் விரும்பப்பட்டியலில் நிச்சயம் சிக்கனுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
குறிப்பாக சிக்கனை காரசாரமாக சமைத்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.காரசாரமான உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான்.
அந்த வகையில் பார்த்ததாலே பசிஎடுக்கும் ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கனை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 20 (அரைத்தது)
நெய் - 2 தே.கரண்டி
எண்ணெய் - 1 தே.கரண்டி
இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி
தண்ணீர் - அரை கப்
சோயா சாஸ் - அரை தே.கரண்டி
வினிகர் - 1 தே.கரண்டி
சோள மாவு - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பச்சை மிளகாய் விழுது சேர்த்து சுமார் 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிக்கனைச் சேர்த்து அடிக்கடி கிளறிவிட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றான வேகவிட வேண்டும்.
பின்னர் சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து சோளமாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை சிக்கனில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நன்றாக வேக வைத்து சிக்கனை இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |