தமிழகத்தில் இப்படியொரு அழகா? ராமேஸ்வரத்தினுள் அந்தமான்; கண்டிப்பாக சென்று பாருங்க
பொதுவாக விடுமுறை தினங்களை மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற சுற்றுலா செல்வார்கள்.
அந்த வகையில் இந்தியாவில் புதிதாக ஒரு சுற்றுலாத்தலம் அறிமுகம் செய்யப்படுகின்றது.
இந்த தலம் தமிழகத்தில் இருப்பதால் குழந்தைகளுடன் அடிக்கடி இங்கு சென்று மகிழ்ந்து விட்டு வரலாம்.
ராமேஸ்வரத்தினுள் ஒரு அந்தமானா?
அந்த வகையில் இந்த இடம் ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு குருசடை, சிங்கிள், முயல், வான், வாழை, முல்லி உள்ளிட்ட 21 தீவுகள் அமைந்துள்ளன.
இது போன்ற தீவுகளுக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு செல்வதற்காக தனியாக படகுகள் கொடுக்கப்பட்டுகின்றது. இந்த தீவுகளை பார்ப்பதற்கு மாலைத்தீவுகளில் இருக்கும் குட்டி குட்டி தீவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
ராமேஸ்வரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஏறத்தாழ 66 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்த “குருசடை தீவு” அமைந்துள்ளது.
படகுகளில் செல்லும் போது ஒரு சவாரிக்கு ஒரு நபருக்கு இந்திய மதிப்பிற்கு 300 ரூபாய் கட்டணமாக அறவிடப்படலாம் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
தீவில் என்ன இருக்கின்றது?
- இந்த இடங்களில் அதிகளவான பவளபாறைகள் இருப்பதால் இங்கு குழந்தைகள் சென்றால் பயனுள்ளதாக இருக்கும்.
- மூலிகைச் செடிகள் மற்றும் மரங்களை கண்டு ரசித்தபடியே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மறு கரையில் உள்ள கடல்பாசிகளை காணலாம்.
- சுண்ணாம்பு ஆய்வுக்கூடம் இருக்கின்றது.
- பழங்காலத்தில் எப்படி மீன்பிடித்தார்கள் என்பதனை இங்குள்ள சில சான்றுகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
- அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான திமிங்கிலத்தின் முதுகு தண்டு, டால்பின் எலும்பு துண்டுகள், மிதவை கற்கள், வரிக்குருவி சங்கு, கிரிசங்கு, யானை சங்கு ஆகியவற்றை காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |