பச்சை நிறத்தில் மாறிய கடல்: மூச்சுத்திணறி உயிரிழக்கும் மீன்கள்! சாப்பிட்டால் ஆபத்தா?
இந்தியாவில் பாம்பன் கடல் பகுதியில் பூங்கோரை பாசியால் சிறிய ரக மீன்கள் ஆயிரக்கணக்காக உயிரிழந்து கரை ஒதுங்கு அவலம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிற பூங்கோரைப் பாசிகள் ஆக்கிரமித்துள்ளது.
இதையடுத்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரை ஆய்வு செய்து வந்த நிலையில், மன்னார் வளைகுடா கடற் பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ‘Algal Bloom’ கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும்.
மீனவர்கள் இதனை பூங்கோரை என்று அழைக்கும் நிலையில், கடலில் அதிகமான பரப்பளவில் படர்ந்திருப்பதால், கடல் நீரும் பச்சை நிறத்திலேயே காட்சி அளிக்கின்றது.
இவ்வாறு படர்ந்திருக்கும் பாசிகளால், பாறைகளில் வசிக்கக்கூடிய மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்ட சுவாசிக்கமுடியாமல் ஆயிரக்கணக்கான மீன்கள் கடந்த 2019ம் ஆண்டில் உயிரிழந்தன.
ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லை என்றாலும் குறித்த பாசி விஷத்தன்மை கொண்டது இல்லை. இதனால் உயிரிழக்கும் மீன்களை நன்றாக கழுவிவிட்டு சாப்பிட்டால் பிரச்சினை எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பூங்கோரை பாசி (algal bloom) என்றால் என்ன?
பாசித்திரள் (algal bloom) என்று அறியப்படும், இது நீர்நிலைகளில் ஏற்படும் திடீர் சூழ்நிலை மாற்றமாகும்.
இது நீர்நிலைகளில் காணப்படும் பாசிகள் அல்லது தாவரங்கள் தனக்கு ஒத்தச் சூழ்நிலை வரும்போது இனப்பெருக்கம் திடீரென மிகுதியாகி நீர்நிலையின் மேற்பரப்பில் படர்ந்து (மொத்த நீர்நிலையே மூடிய வன்னம்) பாசிகளின் சேர்க்கையாக காட்சியளிக்கும். இதையே நாம் பாசிப்படர்ச்சி/பாசித்திரள் என்று கூறப்படுகின்றது..
பாசித்திரள் நன்னீரிலோ கடல் நீரிலோ தனக்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும் வேளைகளில் தோன்றுகின்றன.
இந்திய மாநிலமான தமிழகத்தின் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாசித்திரள் தோன்றுகிறன்றன. இதனை மீனவர்கள் பூங்கோரை என்றழைக்கின்றனர்.
இவை கடலில் படரும் போது கடல்நீர் பச்சை நிறத்தில் மாறிவிடும். அப்போது கடல் நீர்ரோட்டம், கடல் அலை, சூறைக்காற்று, போன்றவற்றின் காரணமாக இவை கடலின் பல்வோறு பகுதிகளுக்கு பிரிந்து சென்றுவிடுவதால் பெரும்பாலும் மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சில ஆண்டுகளில் கடல் நீர்ரோட்டம், கடல் அலை, கடுங்காற்று போன்றவை இல்லாமல் போகும்போது இந்த பாசிகள் இடம்பெயராமல் குறிப்பிட்டப் பகுதியில் தேங்கிவிடுக்னிறன.
அப்போது இந்த நுண்ணுயிர் கடற்பாசிகளை மீன்கள் சாப்பிடுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.