பாரதி கண்ணம்மா சீரியலில் தொகுப்பாளர் ரக்ஷன் நடிக்கிறாரா? சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மக்கள் மனதை கவர்ந்துள்ளார்கள்.
அதிலும் இரண்டாவது கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வரும் அகிலன் மற்றும் கண்மணி இருவரும் தற்போது சின்னத்திரையில் பிரபலமான ரீல் ஜோடியாக ரசிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அகிலன் மற்றும் கண்மணியுடன் இணைந்து தொகுப்பாளர் ரக்ஷன் புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், பாரதி கண்ணம்மா சீரியலில் ரக்ஷன் நடிக்கிறார் என்று கிசுகிசுகின்றனர்.
ஆனால் இது நிகழ்ச்சி ஒன்றில் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.