தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டிற்கு வாங்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் தான் பிரியங்கா. இவர் சமீபத்தில் கூட நடந்துமுடிந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பல ஆண்டுகளாக தனது சுட்டித்தனமான பேச்சியினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், மக்களையும் அதிகமாக கவர்ந்து வருகின்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிரபல ரிவியின் செல்லப்பிள்ளை என்று தான் பிரியங்காவை கூட வேண்டும். அந்த அளவிற்கு தனது திறமையை வேலையில் செய்து வருவதுடன், பல ஆண்டுகளாக அந்த சேனலிலேயே வேலை செய்து வருகின்றார்.
நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் திடீரென காணொளி எடுத்து வெளியிட்டு, அனைவரையும் கதிகலங்கவும் வைக்கின்றார்.
சம்பளம் என்ன?
இவ்வாறு ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பிரியங்கா ஒரு எபிசோடுக்கு 2 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து பிரியங்கா எந்தவொரு விளக்கத்தையும் அளிக்காத நிலையில், ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்குவது என்பது எளிதான காரியம் இல்லை... பகல் தொடங்கி இரவு முழுக்க நின்று கொண்டே செய்ய வேண்டியதாகும்.
கமெரா முன்பு தங்களுக்கு ஏற்படும் வலிகளை கூட வெளிகாட்ட முடியாத நிலையில், பிரியங்கா சில மாதங்களுக்கு முன்பு காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
கேமராக்கு பின் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் கால் வலியோடு நின்று கொண்டு அழுது கொண்டிருந்த பிரியங்கா டேக் என்று சொன்னதும் ஓடி சென்று சிரித்த முகமாக அங்கு இருக்கும் போட்டியாளர்களை கலாய்த்து கொண்டிருந்த காட்சி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |