மணிமேகலையின் புதிய வீடு... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தனது காதல் கணவருடன் சேர்ந்து புதிய வீடு கட்டியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை ஹுசைன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஹுசைன் சினிமாவில் நடனம் ஆடுபவராகவும், நடன இயக்குனராகவும் இருந்தவர் ஆவார். நிகழ்ச்சி ஒன்றின் போது இருவரும் சந்தித்த நிலையில் மணிமேகலைக்கு பிடித்துப் போகவே தனது காதலையும் அவரிடம் கூறியுள்ளார்.

பின்பு இருவரும் காதலித்து வந்த நிலையில், மணிமேகலையின் வீட்டில் காதலுக்கு பயங்கர எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய மணிமேகலை ஹுசைனை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் பெரியவர்கள் ஆதரவு இல்லாமல் தனது சொந்த முயற்சியில் அடுத்தடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகின்றனர். தற்போது மணி மேகலை மிகப்பெரிய வீடு ஒன்றினைக் கட்டியுள்ளார்.

இதன் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடைபெற்றுள்ள நிலையில் இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவரும் பூஜை செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |