தடுப்பூசி போடவே யோசிச்சேன்.. ஏன்னா! டிடி எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார் தெரியுமா?
பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷ்னி என்கிற டிடி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நிலைமையைச் சீர் செய்ய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதில் முக்கியமாக கருதப்படுவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆபத்து என்று மக்கள் சிலரும் அச்சப்பட்டு ஊசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி டிடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
மேலும் புகைப்படத்துடன், டிடி கூறியிருப்பது என்னவென்றால், தான் வேறொரு சிகிச்சை எடுத்துவந்ததால், மிகவும் பயந்துகொண்டு தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டியதாகவும், பின்பு தனது மருத்துவரின் கேட்டு போட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தனக்கு தடுப்பூசி போட்ட செவிலியர் காயத்ரி, வலிக்காமல் சிரிச்சிக்கிட்டே போட்டுவிட்டதாகவும், தனது நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிடி தடுப்பூசி போடுவதாக சீன் காட்டியுள்ளதாகவும், கடைசி வரை ஊசி குத்தாமல் செவிலியரும் நின்றுள்ளதாகவும், இதுவும் மக்களை ஏமாற்ற நடந்த செட்டப் என்றும் கூறி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டதிலும், இவ்வாறான சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.