நிகழ்ச்சியின் போது ஆடையை மாற்றி வர சொன்ன பிரபலம்... பலவருட உண்மையை உடைத்த டிடி
தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வழங்கிய போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவத்தை பல ஆண்டுகளுக்கு பின்பு பகிர்ந்துள்ளார்.
நடிகை டிடி
தனது அட்டகாசமான பேச்சினால் ரசிகர்களை கவர்ந்து வரும் தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் தான் டிடி. இவரது கலக்கலப்பான பேச்சை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது.
சின்னத்திரை நிகழ்ச்சிகள், இசை வெளீட்டு விழாக்கள் என்று அனைத்து நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவாக மகிழ்ச்சியாக அமையவில்லை. தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட டிடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
இவரிடம் விவாகரத்து பெற்ற கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் டிடி தனது இரண்டாவது திருமணம் குறித்த பேச்சைக் கூட எடுக்கவில்லை.
நிகழ்ச்சியில் ஆடையை மாற்ற கூறிய பிரபலம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட டிடி, தொகுப்பாளினியாக இருந்த சமயத்தில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் பேட்டி எடுத்த எந்த விருந்திருனரும் கோபப்பட்டதில்லை. ஒருமுறை தனது நிகழ்ச்சிக்கு ஹீரோயின் வந்ததாகவும், சற்று தாமதாகவே வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறித்த பிரபலம் வந்ததும் டிடியின் உடையும் தனது உடையும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு, டிடி-யிடம் வேறொரு ஆடை எடுத்து வந்திருக்கீங்களா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட டிடி கஷ்டப்பட்டதுடன், குறித்த நடிகையின் பேச்சு தொகுப்பாளினிக்கு எதற்கு இந்த ஆடை என்ற கண்ணோட்டத்தில் பேசியதாக கூறியுள்ளார்.
ஆனாலும் டிடி தனது வேலையை அந்த தருணத்தில் சிறப்பாகவே செய்து முடித்துள்ளார். நடிகையிடம் எந்தவொரு முகசுழிப்பும் இல்லாமல் பேட்டி எடுத்துள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
