ஏன்னு மட்டும் கேக்காதீங்க... காணொளி வெளியிட்டு தொகுப்பாளினி டிடி போட்ட பதிவு!
தொகுப்பாளினி டிடி தற்போது காதல் நாயகனே என்ற பாடலுடன் கியூடான காணொளியொன்றை வெளியிட்டு ரசிகர்கர்களுக்கு சொல்லியிருக்கும் தகவல் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் திவ்யதர்ஷினி. இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரதில் முடிந்தது.
அதன் பின்னர் சில காலம் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தியிருந்தார்.
தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு குணமடைந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் அவர் எடுத்த கியூட் வீடியோவை பதிவிட்டு காதல் நாயகனே என்ற பாடலை போட்டதுடன் அதற்கான காரணத்தை கேட்க வேண்டாம், எனக்கு காரணம் தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளதுடன் லைக்குகளையும் வாரிகுவித்து வருகின்றார்கள்.