உண்மையில் ஆண்மை என்பது இது தான்... வெளிப்படையாக பேசிய தொகுப்பாளினி டிடி! குவியும் பாராட்டு
தொகுப்பாளினி டிடி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சிறந்த கணவன் அல்லது, சிறந்த ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து வெளிப்படையாக பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், பராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
1999ம் ஆண்டு பள்ளி படிக்கும்போதே விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான அவர், முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனேயே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.
இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான். இது அவரின் அடையாளமாவே மாறியது.
அதனை தொடர்ந்து சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றார்.
தற்போது தனிமையிலும் மகிழ்சியாகவும் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வரும் டிடி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சிறந்த கணவன் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து பேசிய விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |