40 வயதை நெருங்கும் டிடியா இது? இளசுகளை கட்டிபோடும் பாடலுக்கும் குத்தாட்டம் போட்ட காட்சி!
40 வயதை நெருங்கும் டிடியின் குத்தாட்டம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திவ்யதர்ஷினி
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் தான் தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
தொகுப்பாளர் மட்டுமல்ல நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர்.
டிடியின் கலக்கல் டான்ஸ்
இந்த நிலையில், 38 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் இவரின் இரண்டாவது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருந்தாலும் நிகழ்ச்சிகளில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், இளசுகளை கட்டி போட்ட பாடலுக்கு சேலையில் நடனம் ஆடி அந்த காட்சியை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார்.
இதில் பார்க்கும் போது நாற்பது வயதை தாண்டும் டிடி என யாரும் கூற மாட்டார்கள். இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அவ்வளவு அழகாக இருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ டிடிக்கு அழகு சேலை தான்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |