சினிமா பிரபலங்களுக்கு நிகராக சொத்து வைத்திருக்கும் தொகுப்பாளினி டிடி... இத்தனை கோடியா?
இன்றை தினம் பிறந்த நாள் கொண்டாடும் தொகுப்பாளினி டிடி யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தொகுப்பாளினி டிடி
பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி. இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.
இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பார்கள். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகளையும் வெகுவாக ஈர்த்தார்.
அதனை தொடர்ந்து விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது.
அண்மைகாலமாக உடல்நிலை காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முழங்கால் வலிக்காக அவர் முதலில் செய்த ஆபரேசன் தவறாகிய நிலையில், தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
வெகு நாட்களாக முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த டிடி தற்போது தான் சரியாகி இருக்கின்றார்.
இந்த நிலையில், இன்றைய தினம் தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் டிடி க்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து மழைபொழிந்து வருகின்றனர்.
சொத்து மதிப்பு
டிடி ஒரு நிகழ்சியை தொகுத்து வழங்குவதற்கு சுமார் 4 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும், இவரின் சொத்து மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி இவர் தனியாக பிசினஸும் நடத்திவருகின்றார். அதன்மூலமாகவும் டிடி-க்கு லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
